
உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.

உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.
சமூக தளங்களில் facebook-ம் ஒன்று. தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது facebook. இந்தியர்களிடையே facebook தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் facebook உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.
Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
இணையத்தில் Google என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் ஒன்று கூகுள் தேடியந்திரம் (Search Engine). Google-ல் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை. PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோகப்படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.
முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.
காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்! முன்னெல்லாம், நாம் படிக்கும் காலங்களில், ஆசிரியர்கள், ஏதேனும் கதை அல்லது கட்டுரைகள் எழுதி வர பணிப்பார்கள். நாமும் மெனக்கெட்டு நூலகம் சென்றோ அல்லது அறிவு சற்று கூடிய பெரிசுகளிடமோ போய் விபரத்தை சொல்லி குறிப்பெடுத்து நம் கட்டுரைகளை வகுப்பில் சமர்ப்பிப்போம்.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் இவையெல்லாம் தொலைந்து …. ‘ஒரு விஷயம் தெரியலையா?’ … ‘கூகிள் போ! …. அங்கு எல்லாம் கிடைக்கும்!!’ என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது. இணையத்தில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் கலந்தே தான் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதினால் குறிப்பிட்ட அந்த கல்விக்கானதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். Google – தனது YouTube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பது பற்றிதான் இப்பதிவு.
Youtube for Schools என்ற இப் பிரிவின் கீழ் பள்ளி மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து பயன்பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கி, தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். YouTube -இல் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொண்டு, இவற்றின் மூலம் மொழிகள், கணிதம், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்ற பலவற்றை மாணவர்கள் கற்று பயன்பெறலாம்.
பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், YouTube -இல் உள்ள, எந்த வீடியோவினையும் பார்க்க இயலும். ஆனால், மாணவர்கள் Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களையும், தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே கருத்துரையும் வராது; Related Videos என்பதும் வராது. எப்படித் தேடினாலும் பாடங்கள் குறித்த வீடியோக்கள் மட்டுமே வரும். இந்த சிறப்பம்சம் மாணவர்கள் மற்ற ஏதேனும் வீடியோக்களைப் பார்க்க தடுப்பதோடு அவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமலும் இருக்க உதவுகிறது.
பள்ளி ஆசிரியர்களுக்காகவே Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் பல பள்ளிகளில் பணிபுரியும் சகஆசிரியர்களின் பாட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளதால், (மற்ற) பள்ளி ஆசிரியர்களும் இவற்றைப் பார்த்து தமது அறிவையும் மேம்படுத்திக்கொள்ளலாம் .
மேலும், குறிப்பிட்ட பள்ளியில் தரவேற்றப்பட்டு இருக்கின்ற வீடியோக்களை, அந்த பள்ளி மட்டுமே பார்க்கும்படியாகயும் அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் வளர்க்கும் YouTube -இன் இச்சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!
http://www.youtube.com/schools
http://www.youtube.com/education
http://youtube.com/teachers
ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites தளமும் ஒன்று.இதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்றுக் கொள்ள classbites வழி செய்வது தான்.
பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லிக் கொடுத்தாலும் கூட சிக்கல் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு தான் classbites வீடியோ வடிவிலான குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது. கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.
குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல். அதிக நேரம் தேவைப்படாமல் குறுகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்தப் பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. Classbites தளத்தில் காணக் கூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓடக் கூடியவை.
குறுங்கல்வி(Micro learning) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்போது விருப்பமோ அப்போது படித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காகத் தான்.
ஒரு விதத்தில் classbites தளம் இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பாடங்களை படிக்கத் துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். இந்த தளத்தின் முகவரி http://classbites.com/
“அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே” என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்புவார்கள். எவ்வளவு முயன்றாலும் அந்த தளத்தின் முகவரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே bookmarking சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடித் தடுமாறாமல் இருக்க bookmarking தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் bookmarking செய்யப்பட்ட தளங்கள் சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனைத் தவிர்க்கும் வகையில் புதியதொரு bookmarking வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான bookmarking சேவை தான் இது. காரணம் recall என்னும் அந்த வசதியில் bookmarking செய்யாமலேயே bookmarking வசதியை பயன்படுத்தலாம். அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி bookmarking செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் recall இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜயம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.
கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள recall ஒருமுறை பொருத்திக் கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரைப் போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்துக்கொள்ளும். வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் சேமித்துக் கொள்கிறது. பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணையதளத்தை தேடிக் கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்படுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இணையதள முகவரி http://www.recawl.com/
இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான Microsoft தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். Microsoftன் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக் கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் Microsoft கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதன் User Interface மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).
Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும். ஏதாவது தேடிப் பெறப்பட்ட தகவல்களை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 buttonகளின் மூலம் பெறப்படும் Recommendationகளை Google+ தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும். தேடுதலுக்கு Bing சேவை பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.
Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட தகவல் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட தகவல் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts. வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ chatting செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் Adobe Flash மென்பொருளின் உதவி தேவைப்படாது.
இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், Google+ல் இருக்கும் Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து Microsoft விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

கணினியிலிருந்து iphone மற்றும் ipadற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்ள நிறைய மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
பெரும்பாலானவர்கள் iTunes என்னும் மென்பொருளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே iphone மற்றும் ipadற்கு audio மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை.
இவ்வாறு iphone மற்றும் ipadற்கு கணினியில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள சந்தையில் நிறைய இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த வகையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான் PC iPod என்னும் மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியிலிருந்து ipad மற்றும் iphoneகளுக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய iphone அல்லது ipadடினையோ கணினியுடன் இணைக்கவும். பின் இந்த அப்ளிகேஷனை open செய்யவும். பின் அந்த அப்ளிகேஷன் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள ipad மற்றும் iphoneனினை வரிசைப்படுத்தும். அதை தேர்வு செய்து கொண்டு பாடல் மற்றும் வீடியோவினை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவ வேண்டுமெனில் .Net Framework 2.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். iTunes 8.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் 7(32பிட், 62பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை பதிவிறக்கம் செய்ய http://www.pcipod.com

சமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது Google + Facebook பயனாளர்களைத் தேட பல வழிகள் இருக்கிறது. ஆனால் Google + பயனாளர்களைத் தேடுவது சற்று சிரமமக இருந்து வந்தது. Google +ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் windowவில் Search என்ற கட்டத்திற்குள் Google +ல் இருக்கும் பயனாளர் பெயர் தொடர்புடையதை வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்த உடனே Google +ல் பயனாளரை தேடி நமக்கு எளிதாக காட்டுகிறது.
இதிலிருந்து நாம் தேடும் நபரை எளிதாக கண்டுபிடிக்கலாம். பயனாளரின் அடிப்படை தகவல் மற்றும் அவர்களின் பெயரின் அடிப்படையில் தேடிக்கொடுக்கும். இந்தத் தளம் Google +ல் இருக்கும் மக்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க உதவும். இணையதள முகவரி http://www.findpeopleonplus.com/