
உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.

உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.

கணினியிலிருந்து iphone மற்றும் ipadற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்ள நிறைய மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
பெரும்பாலானவர்கள் iTunes என்னும் மென்பொருளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே iphone மற்றும் ipadற்கு audio மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை.
இவ்வாறு iphone மற்றும் ipadற்கு கணினியில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள சந்தையில் நிறைய இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த வகையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான் PC iPod என்னும் மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியிலிருந்து ipad மற்றும் iphoneகளுக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய iphone அல்லது ipadடினையோ கணினியுடன் இணைக்கவும். பின் இந்த அப்ளிகேஷனை open செய்யவும். பின் அந்த அப்ளிகேஷன் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள ipad மற்றும் iphoneனினை வரிசைப்படுத்தும். அதை தேர்வு செய்து கொண்டு பாடல் மற்றும் வீடியோவினை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவ வேண்டுமெனில் .Net Framework 2.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். iTunes 8.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் 7(32பிட், 62பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை பதிவிறக்கம் செய்ய http://www.pcipod.com

வீணாகிப்போகும் காகிதங்களைத் துண்டுத் துண்டாக வெட்டி ஒரு ஜாடியில் இட்டு அதில் நீரையும் கலந்து என்ஸைம்கள் எனப்படும் ‘நொதி’களை அவற்றினூடாகச் செலுத்தி, ‘சர்க்கரை’யாக மாற்றி அதிலிருந்து மின்சாரம் பெறும் வழிமுறை ஒன்றை மின்னணு உலகின் ஜாம்பவனான சோனி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில் பயன் பெறலாம் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு செய்முறைகாட்சி ஒன்றில் சிறுவர்களை அழைத்து வீணான காகிதங்களையும், அட்டைகளை (Cardboard)யும் துண்டுத்துண்டாக வெட்டி ஜாடியினுள் செலுத்தும்படி கேட்டுக்கொண்ட சோனி ஊழியர்கள் அதிலே நுண்ணுயிர் நொதிகள் (என்ஸைம்) சேர்த்த நீரைச் செலுத்தி குலுக்கினர். பின்னர் இந்த ஜாடியினுள் இட்ட இழைகளின் வழியாக ஒரு சிறுமின்விசிறியை சுழலச் செய்து காண்பித்தனர்.
இந்த நுட்பம் தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது என்றும், இன்னுமின்னும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவைத் : குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார். மேலும் இவ்வொட்டகம் முஸ்லீம்களின் இறை தூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார்.
மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை (அதாங்க நம்ம ஊர் மதிப்பில் 37 கோடி) பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார். நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.
மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது. அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள். அனல் மின்சாரம் , அணுமின்சாரம் , காற்றில் இருந்து , அலையில் இருந்து , நீரில் இருந்து , சூரிய ஒளியில் இருந்து , கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க , தற்பொழுது ” நீங்கள் நடந்தால் போதும் , மின்சாரம் கிடைக்கும் “ என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர். அட …! அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் , மக்கள் இந்த Tiles மேல் ஏறிப்போவதினால் உண்டாகும் இயக்க ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.
சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2 . 1 வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர். 100 சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5 வருடங்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது. இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.

மக்கள்தொகை இன்னும் சில தினங்களில் 700 கோடியை எட்டவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, ஐ.நா.வின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மாதம் 31-ம் தேதி உலகின் 700 கோடியாவது குழந்தை பிறக்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை கடந்த 25 ஆண்டுகளுக்குள் 200 கோடி அதிகரித்திருப்பது இங்கே கவனத்துக்குரியது. வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தான் மக்கள்தொகை அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக, உலகில் வளப் பற்றாக்குறை மிகுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மக்கள்தொகை பெருக்கத்தை இந்த உலகம் எவ்வளவு காலத்துக்கு தாங்கும் என்பதே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகிறது.
கடந்த 60 ஆண்டுகளில், உலகின் கருத்தரிப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்து, ஒரு பெண்ணுக்கு இரண்டரைக் குழந்தை என்ற சரசாரியாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் ஒவ்வோர் ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் வளரும் நாடுகளின் பங்கு தான் மிக அதிகம்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் விழிப்பு உணர்வுகள் இல்லாமை போன்ற காரணங்களால் பெண்கள் பெருமளவு குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்களும், குழந்தைகளும் மோசமான சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய காரணங்களால், ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
அதேவேளையில், உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, உலகிலுள்ள 20 சதவீத செல்வந்தர்களிடம், உலகின் மொத்த வருமானத்தில் 77 சதவீதம் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வளத்தை பெருக்குவதுடன், அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வலியுறுத்துகிறது.
தாஜ்மகாலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் 5 ஆண்டுகளில் அது இடிந்து விழுந்து விடும் என்றும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியாகியது. உள்ளூர் எம்.பி ராம்சங்கரையும் மேலும் ஒரு வரலாற்று ஆய்வாளரையும் மேற்கோள் காட்டியே இங்கிலாந்து செய்தித்தாள் ஒன்று இச்செய்தியை ஆரம்பத்தில் வெளியிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகாலுக்கு ஆபத்து என்ற செய்தி அறிந்த சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில் இது பெரும் விவாதத்தை எழுப்பியது. இந்நிலையில் இச்செய்தியை தொல்பொருள் துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கும் போது, “எங்களால் தாஜ்மகால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த விரிசலும் இல்லை. அங்குப் பதிக்கப்பட்டுள்ள மரங்கள் எதுவும் உளுத்துப் போகவும் இல்லை. தாஜ்மகால் எந்த ஆபத்தும் இல்லாமல் பலமாகவே உள்ளது. இது வெறும் வதந்தியே. விசமிகள் யாரோ தான் வதந்தியைப் பரப்பியுள்ளார்கள்” என்று தெரிவித்தனர்.
கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்றுநோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.
புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.
இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார்.
மெரி்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் கடந்த 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது பள்ளி வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார்.அவர் விலகினாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணியை உலகம் மறக்கவில்லை.