ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி தற்பொழுது இலங்கை இந்தியாவிற்கும்!!

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். 


இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMSஎன்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.

 

அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Windowஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும். 

தங்கத்தின் ஏறுபடலம்

கடந்த 86 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி இதோ அருமையாக அட்டவணையாக

தாஜ்மகாலுக்கு ஆபத்தா? : தொல்பொருள் துறை விளக்கம்!

தாஜ்மகாலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் 5 ஆண்டுகளில் அது இடிந்து விழுந்து விடும் என்றும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியாகியது. உள்ளூர் எம்.பி ராம்சங்கரையும் மேலும் ஒரு வரலாற்று ஆய்வாளரையும் மேற்கோள் காட்டியே இங்கிலாந்து செய்தித்தாள் ஒன்று இச்செய்தியை ஆரம்பத்தில் வெளியிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகாலுக்கு ஆபத்து என்ற செய்தி அறிந்த சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில் இது பெரும் விவாதத்தை எழுப்பியது.  இந்நிலையில் இச்செய்தியை தொல்பொருள் துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கும் போது,  “எங்களால் தாஜ்மகால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த விரிசலும் இல்லை. அங்குப் பதிக்கப்பட்டுள்ள மரங்கள் எதுவும் உளுத்துப் போகவும் இல்லை. தாஜ்மகால் எந்த ஆபத்தும் இல்லாமல் பலமாகவே உள்ளது.  இது வெறும் வதந்தியே.  விசமிகள் யாரோ தான் வதந்தியைப் பரப்பியுள்ளார்கள்” என்று தெரிவித்தனர்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers