ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி தற்பொழுது இலங்கை இந்தியாவிற்கும்!!

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். 


இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMSஎன்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.

 

அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Windowஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும். 

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட

இணையத்தில் Google என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் ஒன்று கூகுள் தேடியந்திரம் (Search Engine). Google-ல் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.  அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை. PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோகப்படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.

  • நீங்கள் முதலில் Google தளத்திருக்கு செல்லுங்கள்.
  • நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும்.
  • பின்பு search button அழுத்தவும்.
  • இப்பொழுது  உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும்.
  • இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers