கடந்த 86 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி இதோ அருமையாக அட்டவணையாக
முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.
புதுடில்லி: “இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது’ என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும். இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம். கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்தின் தேவையானது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 23 சதவீதம் குறைந்திருந்தாலும், டன் அளவில், தங்கத்தை அதிகளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. பணத்தின் மதிப்பு குறைவதற்கு, தங்கத்தின் நுகர்வு அதிகரிப்பதும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தங்கம் தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் சப்ளையான தங்கத்தில், 92 சதவீதம் இறக்குமதி மூலமே சரி செய்யப்பட்டது. மீதி மட்டுமே இதர வகைகளில் வந்தது. இவ்வாறு, மேக்குவாரி கூறியுள்ளது.

மக்கள்தொகை இன்னும் சில தினங்களில் 700 கோடியை எட்டவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, ஐ.நா.வின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மாதம் 31-ம் தேதி உலகின் 700 கோடியாவது குழந்தை பிறக்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை கடந்த 25 ஆண்டுகளுக்குள் 200 கோடி அதிகரித்திருப்பது இங்கே கவனத்துக்குரியது. வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தான் மக்கள்தொகை அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக, உலகில் வளப் பற்றாக்குறை மிகுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மக்கள்தொகை பெருக்கத்தை இந்த உலகம் எவ்வளவு காலத்துக்கு தாங்கும் என்பதே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகிறது.
கடந்த 60 ஆண்டுகளில், உலகின் கருத்தரிப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்து, ஒரு பெண்ணுக்கு இரண்டரைக் குழந்தை என்ற சரசாரியாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் ஒவ்வோர் ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் வளரும் நாடுகளின் பங்கு தான் மிக அதிகம்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் விழிப்பு உணர்வுகள் இல்லாமை போன்ற காரணங்களால் பெண்கள் பெருமளவு குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்களும், குழந்தைகளும் மோசமான சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய காரணங்களால், ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
அதேவேளையில், உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, உலகிலுள்ள 20 சதவீத செல்வந்தர்களிடம், உலகின் மொத்த வருமானத்தில் 77 சதவீதம் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வளத்தை பெருக்குவதுடன், அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வலியுறுத்துகிறது.
கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்றுநோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.
புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.
இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார்.
மெரி்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் கடந்த 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது பள்ளி வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார்.அவர் விலகினாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணியை உலகம் மறக்கவில்லை.
நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.
நல்ல தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேளைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.
ஆரோக்கியமான காலை உணவு: உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
நடக்க வேண்டும்: உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.
தண்ணீர் குடிக்க வேண்டும்: நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
சூரிய ஒளி: சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.
மதிய உணவு: அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
உரையாடல்: எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.
மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
- கல்வி களஞ்சியம்