முதல் விண்வெளி ஓட்டல் ‘கேலாட்டிக் சூட்’!


உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.

விண்வெளி ஆராய்ச்சியில் நிபுணராகத் திகழ்ந்த முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட் இந்த விண்வெளி ஓட்டலை நிர்மாணித்து வருகிறார்.
3 நாள்கள் தங்க, ரூ.20.7 கோடி செலுத்துபவர்களுக்கு பயணத் தேதிக்கு முன்பாக 8 வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு முறையும் 4 பேர் ஓட்டலுக்குச் செல்லலாம். அவர்களுடன் 2 விண்வெளி வீரர்களும் பயணிப்பர். பூமியில் இருந்து 450 கி.மீ மேலே அமைந்துள்ள ஓட்டல் என்பதால் விருந்தாளிகள் மிதக்க வேண்டியிருக்கும். எனவே இவர்களும் விண்வெளி வீரர்களுக்கான வெல்க்ரோ உடைகள்  அணிய வேண்டும். ஓட்டல் அறைகளின் சுவரைப் பிடித்தபடி தான் தங்களுக்கான இடத்தை இவர்கள் அடைய முடியும்.
கேலாட்டிக் சூட்டுக்கு ராக்கெட் மூலம் செல்ல ஒன்றரை நாட்கள் பிடிக்கும். மணிக்கு 0 முதல் 30ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் சுற்றும் இந்த ஓட்டல், பூமியை 80 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றிவரும். இந்த கணக்குப்படி பார்த்தால் இந்த ஓட்டலில் தங்குபவர்கள் 24 மணி நேரத்தில் சூரியன் தோன்றி மறைவதை 15 முறை பார்த்து ரசிக்க முடியும்.
விண்வெளி ஓட்டலில் தங்க இதுவரை 200 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 43 பேர் பதிவு செய்துள்ளதாகவும் இதற்கான இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த ஓட்டலில் காபி சாப்பிட உங்களுக்கும் ஆசையா? அப்படின்னா 21 கோடி ரூபாயை கையில் வைத்துக்கொண்டு www.galacticsuite.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாமே!

தங்கத்தின் ஏறுபடலம்

கடந்த 86 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி இதோ அருமையாக அட்டவணையாக

Facebook உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம்

சமூக தளங்களில் facebook-ம் ஒன்று. தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது facebook. இந்தியர்களிடையே facebook தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் facebook உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.

பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின்படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.
தற்போதைய நிலவரப்படி facebook உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் உள்ளன.  இந்தியாவில் இணையம் பயன்படுத்துவது வேகமாக வளர்ந்து வருகின்றது. இதனால் facebook பயணர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Avoid ஓவன் முறை

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்

முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய சில தகவல்கள்:
  • செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
  • கடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும்.
  • இந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • 26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.

  • இளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • இணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • 79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • இந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பூமிக்கு 600 ஒளி வருட தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளி வருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்குச் சமமானது.

தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழத் தேவையான சூழ்நிலை இந்தக் கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி உள்ள சூரிய மண்டலம் தவிர விண்வெளியில் உயிரினங்கள் வசிக்கக் கூடிய கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கெப்ளர் தொலைநோக்கி மூலம் விண்வெளியை ஆராயத் தொடங்கியது.        இந்தத் தொலைநோக்கி மூலமே தற்போது இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்

மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.   அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது.   அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.   அனல் மின்சாரம் ,  அணுமின்சாரம் ,  காற்றில் இருந்து ,  அலையில் இருந்து ,  நீரில் இருந்து ,  சூரிய ஒளியில் இருந்து ,   கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க ,  தற்பொழுது ” நீங்கள் நடந்தால் போதும் ,  மின்சாரம் கிடைக்கும் “  என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles  கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர்.   அட …! அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் ,  மக்கள் இந்த Tiles  மேல்  ஏறிப்போவதினால்  உண்டாகும்  இயக்க  ஆற்றல்  மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.

சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2 .  1   வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர். 100  சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5  வருடங்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது.   இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.

 தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல்  லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும்   Westfield Stratford City   ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும்  என தெரிகிறது.

முட்டை சாப்பிடுங்க.. மூளை சுறுசுறுப்பாகும்.. : ஆய்வாளர்கள் தகவல்


மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில், குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம். வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம். தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மூக்கு – நோயைக் கண்டறிய

நன்றி: தினமணி (17-Nov-2011)

பன்றிக் கொழுப்பு கலந்த பொருட்கள் – எச்சரிக்கை

அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280,
E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434,
E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481,
E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635,
E904.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers