Microsoftன் புதிய சமூக வலைத்தளம்!

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான Microsoft தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். Microsoftன் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக் கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் Microsoft கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதன் User Interface மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).

Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும். ஏதாவது தேடிப் பெறப்பட்ட தகவல்களை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 buttonகளின் மூலம் பெறப்படும் Recommendationகளை Google+ தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும். தேடுதலுக்கு Bing சேவை பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.

Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட தகவல் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட தகவல் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts. வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ chatting செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் Adobe Flash மென்பொருளின் உதவி தேவைப்படாது.

இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், Google+ல் இருக்கும் Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து Microsoft விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

கணினியிலிருந்து கோப்புக்களை iphone மற்றும் ipadகளுக்கு மாற்றுவதற்கு மென்பொருள்


கணினியிலிருந்து iphone மற்றும் ipadற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்ள நிறைய மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

பெரும்பாலானவர்கள் iTunes என்னும் மென்பொருளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே iphone மற்றும் ipadற்கு audio மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை.

இவ்வாறு iphone மற்றும் ipadற்கு கணினியில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள சந்தையில் நிறைய இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த வகையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான் PC iPod என்னும் மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியிலிருந்து ipad மற்றும் iphoneகளுக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய iphone அல்லது ipadடினையோ கணினியுடன் இணைக்கவும். பின் இந்த அப்ளிகேஷனை open செய்யவும். பின் அந்த அப்ளிகேஷன் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள ipad மற்றும் iphoneனினை வரிசைப்படுத்தும். அதை தேர்வு செய்து கொண்டு பாடல் மற்றும் வீடியோவினை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவ வேண்டுமெனில் .Net Framework 2.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். iTunes 8.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் 7(32பிட், 62பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை பதிவிறக்கம் செய்ய http://www.pcipod.com

Google + பயனாளரை தேடிக் கொடுக்கும் தளம்


சமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது Google + Facebook பயனாளர்களைத் தேட பல வழிகள் இருக்கிறது. ஆனால் Google + பயனாளர்களைத் தேடுவது சற்று சிரமமக இருந்து வந்தது. Google +ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் windowவில் Search என்ற கட்டத்திற்குள் Google +ல் இருக்கும் பயனாளர் பெயர் தொடர்புடையதை வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்த உடனே Google +ல் பயனாளரை தேடி நமக்கு எளிதாக காட்டுகிறது.

இதிலிருந்து நாம் தேடும் நபரை எளிதாக கண்டுபிடிக்கலாம். பயனாளரின் அடிப்படை தகவல் மற்றும் அவர்களின் பெயரின் அடிப்படையில் தேடிக்கொடுக்கும். இந்தத் தளம் Google +ல் இருக்கும் மக்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க உதவும். இணையதள முகவரி  http://www.findpeopleonplus.com/

வீடியோ Chatல் ஜாலம்

Web camera பாவித்து chat செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். webcamல் chat செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன? முக்கியமாக நம் குழந்தைகளுடன் web cameraவில் chatting செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த camera மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம். இதற்கு பல softwareகள்

இலவசமாகவே உள்ளது. இவ்வாறான வித்தைகளை காட்டக் கூடிய ஒன்று தான் webcammax. இந்த மென்பொருளில் உள்ள பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.

Windows Operating System பாவிப்பவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய http://www.webcammax.com

வீணாகும் துண்டு காகிதங்களிலிருந்து மின்சாரம்


வீணாகிப்போகும் காகிதங்களைத் துண்டுத் துண்டாக வெட்டி ஒரு ஜாடியில் இட்டு அதில்  நீரையும் கலந்து என்ஸைம்கள் எனப்படும் ‘நொதி’களை அவற்றினூடாகச் செலுத்தி,  ‘சர்க்கரை’யாக மாற்றி அதிலிருந்து மின்சாரம் பெறும் வழிமுறை ஒன்றை மின்னணு உலகின்  ஜாம்பவனான சோனி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இதிலிருந்து கிடைக்கும் மின்சாரம்  மூலம் பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில் பயன் பெறலாம் என்றும்  சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு செய்முறைகாட்சி ஒன்றில் சிறுவர்களை  அழைத்து வீணான காகிதங்களையும், அட்டைகளை (Cardboard)யும் துண்டுத்துண்டாக வெட்டி  ஜாடியினுள் செலுத்தும்படி கேட்டுக்கொண்ட சோனி ஊழியர்கள் அதிலே நுண்ணுயிர் நொதிகள் (என்ஸைம்) சேர்த்த நீரைச் செலுத்தி குலுக்கினர். பின்னர் இந்த ஜாடியினுள் இட்ட  இழைகளின் வழியாக ஒரு சிறுமின்விசிறியை சுழலச் செய்து காண்பித்தனர்.
இந்த  நுட்பம் தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது என்றும், இன்னுமின்னும் ஆழமாகவும்  விரிவாகவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சோனி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பூமிக்கு 600 ஒளி வருட தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளி வருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்குச் சமமானது.

தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழத் தேவையான சூழ்நிலை இந்தக் கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி உள்ள சூரிய மண்டலம் தவிர விண்வெளியில் உயிரினங்கள் வசிக்கக் கூடிய கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கெப்ளர் தொலைநோக்கி மூலம் விண்வெளியை ஆராயத் தொடங்கியது.        இந்தத் தொலைநோக்கி மூலமே தற்போது இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

37 கோடிக்கு விற்கப்பட்ட ஒட்டகம் !!!

குவைத் : குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார். மேலும் இவ்வொட்டகம் முஸ்லீம்களின் இறை தூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார்.
மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை (அதாங்க நம்ம ஊர் மதிப்பில் 37 கோடி) பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார். நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.

இந்தியர்களிடம் 18 ஆயிரம் டன் தங்கம்

புதுடில்லி: “இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது’ என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும். இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம். கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்தின் தேவையானது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 23 சதவீதம் குறைந்திருந்தாலும், டன் அளவில், தங்கத்தை அதிகளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. பணத்தின் மதிப்பு குறைவதற்கு, தங்கத்தின் நுகர்வு அதிகரிப்பதும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தங்கம் தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் சப்ளையான தங்கத்தில், 92 சதவீதம் இறக்குமதி மூலமே சரி செய்யப்பட்டது. மீதி மட்டுமே இதர வகைகளில் வந்தது. இவ்வாறு, மேக்குவாரி கூறியுள்ளது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers