சர்வதேச விமான போக்குவரத்து:
தி௫ச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம்:
திருப்பத்தூரில் இருந்து 189 கி.மீ தூரத்தில் உள்ளது திருச்சி விமான நிலையம்.
திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் விமான சேவையை இயக்க தொடங்கின. தற்போது கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற விமான நிறுவனங்கள், விமான சேவையை வழங்கி வருகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து திருச்சி விமான நிலையம் தான் சர்வதேச விமான போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக கடந்த 20 ஆண்டுக்கு மேலாக விளங்குகிறது. சராசரரியாக ஆண்டுக்கு இங்கு 686 உள்நாட்டு போக்குவரத்தும், 1659 வெளிநாட்டு போக்குவரத்தும் நடந்து வருகிறது. இந்த விமான நிலையம் சுங்கத்தீர்வு போன்ற வசதிகள் பெற்றதாக இருப்பதால் வெளிநாட்டு போக்குவரத்து விமானங்களை இயக்குவது சாத்தியமானதாகவும், வசதியானதாகவும் உள்ளது. ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற இந்த விமான நிலையம், மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல உதவியாக மிகச் சிறந்த சேவையாற்றி வருகிறது.
திருச்சி வானூர்தி நிலையத்தின் இணையத்தளம்
உள்நாட்டு போக்குவரத்து விமான சேவை:
மதுரை வானூர்தி நிலையம்:
திருப்பத்தூரில் இருந்து 73 கி.மீ தூரத்தில் உள்ளது மதுரை விமான நிலையம்
ராணுவ விமானதளமாக இருந்த மதுரை விமானநிலையம், 1960க்கு பின் சிவில் விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
• மதுரைக்கு 1965ல் “டகோடா(டி.சி.,3)’ ரக விமானம் சென்னையிலிருந்து வந்து சென்றது. அதில் 26 பேர் செல்லலாம். பின் 40 பேர் பயணம் செய்யும் “போக்கர் பிரண்ட்ஷிப்’ ரக விமானம் மதுரை வந்தது.
• 1970 களில் மதுரை வந்த “ஆவ்ரோ’ ரக விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். சென்னை-மதுரை- திருவனந்தபுரம் மற்றும் சென்னை-மதுரை-பெங்களூரு என இரு விமான சர்வீஸ் நடந்தது.
• 1980க்கு பின் “போயிங் 737′ ரக விமானம் மதுரை வந்தது. அதில் 147 பேர் பயணம் செய்ய வசதி இருந்தும், ரன்வே பலவீனமாக இருந்ததால், குறைந்த அளவு பயணிகளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், என்.இ.பி.சி., தனியார் நிறுவனம் “ஏ.டி.ஆர்.,’ ரக விமானத்தை சென்னை- மதுரை போக்குவரத்திற்கு பயன்படுத்தியது.
• ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் “போயிங்’ ரக விமானத்தில் மும்பை-மதுரை போக்குவரத்தை துவக்கியது. சில ஆண்டுகளுக்கு பின் இரு நிறுவனமும் போக்குவரத்தை ரத்து செய்தது.
• தற்போது ஜெட் ஏர்வேஸ், ஏர் டெக்கான் நிறுவனத்துடன் இணைந்த கிங் பிஷர் நிறுவனங்கள் “ஏ.டி.ஆர்.,’ ரக விமானங்களை பயன்படுத்துகிறது. பாரமவுன்ட் ஏர்வேஸ் “எம்பரர்’ ரக விமானத்தை பயன்படுத்துகிறது.
• இந்தியன் விமான நிறுவனம் “ஏர்பஸ் 320′ ரக விமானத்தை பயன்படுத்துகிறது. இதில் குறைந்தது 170 பயணிகள் செல்லலாம். தற்போது மதுரை வரும் சிறிய ரக விமானங்களுக்கு இடையே “ஏர்பஸ் 320 ‘ ரக விமானம் ஜாம்பவானாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ விமானதளமாக மதுரை விமானநிலையம் இருந்தது. பின், மதுரையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளின் போக்குவரத்திற்கும், அவர்களுக்கு பத்திரிகைகள் எடுத்துவரவும் விமான போக்குவரத்து துவங்கியது. சுதந்திரத்திற்கு பின் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அவ்வப்போது மதுரை வந்து செல்லும். பின்னர் சில ஆண்டுகளில், தினமும் மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரை, மீண்டும் அதே மார்க்கமாக மும்பைக்கு விமானம் சென்றது. அப்போது எல்லாம் மதியம் வரவேண்டிய விமானம் நள்ளிரவு 12 மணிக்கு கூட வரும். இடையில் தனியார் நிறுவனங்கள் சிறியரக விமானங்களை இயக்கி, தொடர முடியாமல் விட்டு விட்டன.
தனியாருக்கு அனுமதி அளித்ததும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏ.டி.ஆர்., ரக விமானத்துடன் மதுரையில் போக்குவரத்தை துவக்கியது. சென்னை-மதுரை மீண்டும் சென்னை என சர்வீஸ் இருந்தது. பின், ஏர் டெக்கான் நிறுவனம் சென்னை-மதுரை-சென்னை, சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி என ஏ.டி.ஆர்., ரக விமான போக்குவரத்தை துவக்கின. சில ஆண்டுகளுக்கு முன் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் சர்வீசை துவக்கியது.















October 8, 2011 at 8:15 pm
trichy air port savaiyai paratuhirom nalla savai athiharihalukum paratukkalai therivikirom ungaludaya savai thodaratum saudi arabiavilirundhu direct savai thodanginal inum vasathiyaha irukum sambantha pattavarhal muyarchiparhala?