
உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.

உலகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.
இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம்.
இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Windowஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.
சமூக தளங்களில் facebook-ம் ஒன்று. தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது facebook. இந்தியர்களிடையே facebook தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் facebook உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.
Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.
ஒமேகா கொழுப்பு அமிலம்
மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வயதான பெண்களுக்கு
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இணையத்தில் Google என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் ஒன்று கூகுள் தேடியந்திரம் (Search Engine). Google-ல் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை. PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோகப்படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.
முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்! முன்னெல்லாம், நாம் படிக்கும் காலங்களில், ஆசிரியர்கள், ஏதேனும் கதை அல்லது கட்டுரைகள் எழுதி வர பணிப்பார்கள். நாமும் மெனக்கெட்டு நூலகம் சென்றோ அல்லது அறிவு சற்று கூடிய பெரிசுகளிடமோ போய் விபரத்தை சொல்லி குறிப்பெடுத்து நம் கட்டுரைகளை வகுப்பில் சமர்ப்பிப்போம்.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் இவையெல்லாம் தொலைந்து …. ‘ஒரு விஷயம் தெரியலையா?’ … ‘கூகிள் போ! …. அங்கு எல்லாம் கிடைக்கும்!!’ என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது. இணையத்தில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் கலந்தே தான் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதினால் குறிப்பிட்ட அந்த கல்விக்கானதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். Google – தனது YouTube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பது பற்றிதான் இப்பதிவு.
Youtube for Schools என்ற இப் பிரிவின் கீழ் பள்ளி மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து பயன்பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கி, தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். YouTube -இல் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொண்டு, இவற்றின் மூலம் மொழிகள், கணிதம், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்ற பலவற்றை மாணவர்கள் கற்று பயன்பெறலாம்.
பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், YouTube -இல் உள்ள, எந்த வீடியோவினையும் பார்க்க இயலும். ஆனால், மாணவர்கள் Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களையும், தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே கருத்துரையும் வராது; Related Videos என்பதும் வராது. எப்படித் தேடினாலும் பாடங்கள் குறித்த வீடியோக்கள் மட்டுமே வரும். இந்த சிறப்பம்சம் மாணவர்கள் மற்ற ஏதேனும் வீடியோக்களைப் பார்க்க தடுப்பதோடு அவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமலும் இருக்க உதவுகிறது.
பள்ளி ஆசிரியர்களுக்காகவே Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் பல பள்ளிகளில் பணிபுரியும் சகஆசிரியர்களின் பாட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளதால், (மற்ற) பள்ளி ஆசிரியர்களும் இவற்றைப் பார்த்து தமது அறிவையும் மேம்படுத்திக்கொள்ளலாம் .
மேலும், குறிப்பிட்ட பள்ளியில் தரவேற்றப்பட்டு இருக்கின்ற வீடியோக்களை, அந்த பள்ளி மட்டுமே பார்க்கும்படியாகயும் அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் வளர்க்கும் YouTube -இன் இச்சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!
http://www.youtube.com/schools
http://www.youtube.com/education
http://youtube.com/teachers
ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites தளமும் ஒன்று.இதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்றுக் கொள்ள classbites வழி செய்வது தான்.
பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லிக் கொடுத்தாலும் கூட சிக்கல் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு தான் classbites வீடியோ வடிவிலான குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது. கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.
குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல். அதிக நேரம் தேவைப்படாமல் குறுகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்தப் பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. Classbites தளத்தில் காணக் கூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓடக் கூடியவை.
குறுங்கல்வி(Micro learning) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்போது விருப்பமோ அப்போது படித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காகத் தான்.
ஒரு விதத்தில் classbites தளம் இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பாடங்களை படிக்கத் துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். இந்த தளத்தின் முகவரி http://classbites.com/